அழகர்கோயிலில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மரியாதை
மதுரை மாவட்டம் அழகர் கோயில் கோட்டை வாசல் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு பேறறிஞர் அண்ணாவின் 109 பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் / சட்டமன்ற கிழக்கு தொகுதி உருப்பினர் மூர்த்தி / தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் / முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது மேலூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான மலைச்சாமி / திமுக ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி / புகழேந்தி அ ரகுபதி ஊராட்சி பிரதிநிதி முத்து பொருள் உ ள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
- முகில்