அனிதா தற்கொலை: அரியலூர் மாவட்டத்தில்
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு
நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாவட்ட மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி அரியலூரில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்தற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 5-ம் தேதி ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.