மாணவி அணிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
அரியலூர் மாணவி அனிதா உச்சநீதிமன்றம் வரை போராடி பார்த்தார் போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க தவறியதால் விபரீத முடிவுக்கு சென்றது வேதனையளிக்கிறது.
இந்தியாவில் தமிழ்நாடு மருத்துவத்துறை வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு திட்டமிட்டு தமிழக மாணவ, மாணவியர்களை பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டதையும், அதனை தடுத்து மாணவ மாணவியர்களின் உயர்கல்வி உரிமையை மீட்க அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கினைத்து வலிமையோடு மத்திய அரசிடம் எடுத்துரைக்க தமிழக அரசு காட்டிய அலட்சியத்தையே மாணவி அனிதாவின் தற்கொலை உணர்த்துகிறது.
தமிழக அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற தன்மையும் இதற்கு காரணம் என்பதை உணர வேண்டும்.உரிமைகளை மீட்பதற்கு தற்கொலைகள் தீர்வாகாது என்பதை மாணவ, மாணவியர் உணர்ந்து துணிவோடு, மன உறுதியோடும் ஒன்றுப்பட்டு போராட்டக் களத்திற்கு வர வேண்டும். மனிதநேயமற்ற அதிகார வர்கத்திற்க்கு முடிவு கட்டுவோம். உரிமைகளை மீட்டெடுக்க தயாராகுவோம் என்பதை அனிதாவின் நினைவாக அனைவரும் சபதமேற்போம். தமிழக விவசாயிகள் சார்பில் மாணவி அனிதாவிற்க்கு கண்ணீர் அஞ்சலியையும், அவரது பெற்றோருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.