Skip to main content

8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு தடை கோரி அன்புமணி ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
 


சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு தடை கோரி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2791 ஏக்டர் நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு தொடங்கியுள்ளது.

இதற்கு தடை விதிக்க கோரி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்த திட்டத்தை செயல்படுத்த 1900 ஏக்டர் நிலங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் அரசு 2791 ஏக்டர் நிலங்களை கையகப்படுத்துவது குறித்து முறையான விளக்கமளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல, ஜூலை 16, 17-ல் சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாமக சார்பில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பொது மக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அதேபோல இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஜருகு, சேவராயன், சின்ன கல்ராயன் என 8 மலைகள் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, சென்னை - சேலம் இடையேயான பசுமை வழி சாலை திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த நிபுணர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவரை இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

சார்ந்த செய்திகள்