அரியலூர் அருகே ஆனைவாரி ஓடையில் தடுப்பணை கட்டுவதில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக செந்துறை ஒன்றிய திமுக (வடக்கு) செயலாளர் மு.ஞானமூர்த்தி, அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம், தளவாய் ஊராட்சிக்கும், மணக்குடையான் ஊராட்சிக்கும் இடையில் உள்ள ஆனைவாரி ஓடையில் பல கோடிரூபாய் செலவில் தடுப்பணை கட்டுவதாக அதிமுக அரசு அறிவித்து 3 மாதத்திர்க்கு முன் வேலை துவங்கப்பட்டு ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்திற்கு எவ்வளவு ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? எத்தனை மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும்? இதன் ஆழம், அகலம், நீளம் என்ன? இதில் தேக்கப்படும் நீரின் கொள்ளளவு என்ன? இது எந்த திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது? இதை கட்டும் ஒப்பந்தத்தாரர் யார்? என்ற விவரங்கள் அடங்கிய தகவல் பலகை இதுவறை வைக்கவில்லை.
ஆளும் அதிமுகவினர் கமிஷன் பெறுவதற்காக இந்த திட்டத்தை கொண்டுவந்தார்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. துரிதமாக கட்டி முடிப்பதற்கான எந்த வேலையும் அங்கு நடைபெறவில்லை.
மேலே கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை உடனடியாக அங்கே வைக்க வேண்டும். விறைந்து வேலையை முடிப்பதற்கான பணிகளை செயல்படுத்த வேண்டும். இல்லையேல் அனைத்துக்கட்சி சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளார்.