கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாகச் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றிய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 52 வயதான பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறி வாங்கி வந்து விழுப்புரத்தில் விற்பனை செய்த 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று 33 பேருக்கு விழுப்புரத்தில் தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று புதிதாக 20 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.