Skip to main content

ஆம்பூரில் வெடிகுண்டா? சோதனையிடும் போலீஸ்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து பின் தோல்வி அடைந்தார். திமுகவுக்கு சிறுபான்மை வாக்குகள் பெரும்பான்மையாக கிடைத்தது. குறிப்பாக வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதி வாக்குகள் திமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றன என்பது குறிப்பிடதக்கது.

 

a

 

இந்த வெற்றி அதிமுகவை விட இந்துத்துவா சக்திகளிடம் அதிகம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கோபத்தை இஸ்லாமியர்கள் மீது முகநூல், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூக வளைதளங்கள் வழியாக காட்டிவருகின்றனர். 


இந்நிலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூரில் வசிக்கும் இந்துத்துவாவை சேர்ந்த ஒருவர், ஆம்பூரில் குண்டு ஒன்னு வச்சியிருக்கன்... என முகநூலில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். ஆம்பூரில் உள்ள சமூக வளைத்தளவாசிகளிடம், இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த தகவல் வேகவேகமாக பரவ, காவல்துறை உயரதிகாரிகள் என்னவென ஆம்பூர் டி.எஸ்.பியிடம் விசாரணை நடத்தினர். 

 

உடனடியாக நகரம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தச்சொல்லியுள்ளனர். வேலூரில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் , பேருந்து நிலையம், ஆம்பூர் ரயில்வே நிலையம் உட்பட பல இடங்களில் எஸ்.ஐ நாகராஜ் தலைமையில் அக்கினி என்கிற பெயருடைய மோப்ப நாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்