Skip to main content

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

த

 

ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் நீண்ட வருடங்களாக பேரணி நடத்த முயன்று வந்த நிலையில், அதற்குத் தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோர் அனுமதி வழங்கவில்லை. பேரணி தொடர்பான அறிவிப்பு வெளியான உடனே பேரணிக்குத் தடை என்ற அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் வெளியாகும். நீதிமன்றத்திலும் தமிழக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அமைப்புக்கு இதுவரை பேரணி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாகக் கடந்த மாதம் இறுதியில் தமிழகத்தில் குறிப்பிட்ட 50 இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

 

இதற்கிடையே தமிழகத்தில் தற்போதைக்கு பேரணி நடத்த அனுமதி வழங்க முடியாது என்று தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தை மீண்டும் நாட, பேரணியை அடுத்த மாதம் நவம்பர் 6ம் தேதி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. குறிப்பாக வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த நிமிடமே பாயும் என்ற எச்சரிக்கையும் நீதிபதி இளந்திரையன் வழங்கினார். இந்நிலையில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்