சிறுமிக்கு பாலியல் தொல்லை: மெக்கானிக் கைது..!
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஆணையாம்பட்டி புதூரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது-28). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கெங்கவல்லி, பாரதிதாசன் தெருவில் இருசக்கர வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், கடை எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் நான்காம் வகுப்பு படிக்கும், ஒன்பது வயது சிறுமியை சாக்லெட் வாங்கித்தருவதாக கூறி, தந்து கடை வைத்துள்ள கட்டத்தின் மாடிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதை பார்த்த அந்த சிறுமியின் தங்கை, இதுகுறித்து அவரது தாயிடம் சென்று தகவல் சொல்லியுள்ளார். உடனே, அச்சிறுமியின் தாயார் மாடிக்கு சென்றார். அப்போது, சிறுமியிடம், தியாகராஜன் தகாத செயலில் ஈடுபட முயன்றது தெரிந்தது.
இதை கண்ட சிறுமியின் தாயார் சத்தம் போட்டதில், அருகிலிருந்த பொதுமக்கள் அங்கே கூடிவிட்டானர். இதையறிந்த தியாகராஜனின் மாடியின் பின்பக்க வழியாக எட்டிக்குதித்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தியாகராஜன், சிறுமியின் உதட்டை கடித்ததில் அவருக்கு இலேசான காயம் ஏற்பட்டிருந்ததால், சிறுமியை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, சிறுமியின் தாயார் ஆத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இரு பிரிவுகளில் தியாகராஜன் மீது வழக்குப்பதிந்த போலீசார், நேற்று தியாகராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- பெ.சிவசுப்பிரமணியம்