அணைகளின் நீர்மட்டங்களைக் கண்காணித்து வரும் படி அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதலவரின் உத்தரவில், "அணைகளின் நீர்மட்டங்களைக் கண்காணித்து வரும் படி அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிலச்சரிவு ஏற்படக் கூடிய மலை மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாண நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படுவோரை முகாம்களில் தங்க வைக்கும் போது கரோனா முன்னெச்சரிக்கை தேவை. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள 244 படகுகளில் 162 மீன்பிடி படகுகள் கரைத் திரும்பியுள்ளனர். கரை திரும்பாத படகுகள் கரை திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 48 அடி கொள்ளளவுக் கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.01 அடியை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக- கேரள மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை அணைக்கான நீர்வரத்து 1,532 கனஅடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.