Skip to main content

"என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்"- சு.திருநாவுக்கரசர் வேண்டுகோள்!

Published on 09/01/2022 | Edited on 09/01/2022

 

"All those who were in touch with me should be tested" - Su. Thirunavukkarasar request!

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

 

இதனிடையே, சில நாட்களுக்கு திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகனும் அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

"All those who were in touch with me should be tested" - Su. Thirunavukkarasar request!

 

இந்த நிலையில் சு.திருநாவுக்கரசர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த இரண்டு நாட்களில் என்னை நேரில் சந்தித்தவர்கள் மற்றும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தியை பிரதமராக்க முழு மூச்சுடன் பாடுபடுவோம்; காங்கிரஸ் தீர்மானம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Congress resolution that we will strive make Rahul Gandhi the Prime Minister

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65ஆவது வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் நடந்தது. திருச்சி  தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை பாராளுமன்ற தொகுதிதி தேர்தல் பொறுப்பாளர் பெனன்ட் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் எம்பி கலந்து கொண்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் 65 ஆவது வார்டு தலைவர்களுக்கு பதவி நியமன ஆணைக்கான கடிதங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அவர்களோடு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நடைபெறவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில், சோனியா காந்தி ஆசியோடு தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, ராகுல் காந்தியை பிரதமராக்க அயராது உழைப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு அதிக இளைஞர்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு கிளைகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும். கட்டமைப்பை வலுப்படுத்தினால் கட்சியும் வளரும். எனவே கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து அயராது பாடுபட வேண்டும்” என்றார்.

Next Story

திருச்சிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த திருநாவுக்கரசர் எம்.பி

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Trichy-Bengaluru train needed - Thirunavukkarasar M.P

இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நேற்று மக்களவையில் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேசினார். அப்போது அவர் தனது தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். 

அவர் பேசியதாவது; சமீபத்தில் ராமேஸ்வரம்  பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட அறந்தாங்கி பகுதிகளில் இருந்தும் கடலோர மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். ஏற்கனவே 250 விசைப் படகுகள் இலங்கை கடற்கரையில் தமிழக மீனவர்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்படாமல் உள்ளது. சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் திருப்பி மீட்டு ஒப்படைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி, தமிழகத்தின் மையப்பகுதியாகவும், மாநகராட்சி நகரமாகவும் இருக்கிறது. இங்கு பெல், துப்பாக்கி தொழிற்சாலை, பீரங்கி தொழிற்சாலை, ரயில்வே தொழிற்சாலை இப்படி மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நிர்வாகங்கள், அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. எனவே திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்.

திருச்சி மாநகராட்சி மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுமார் 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள். புதுக்கோட்டைக்கு அருகில் கருவேப்பிலான் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க வேண்டும். திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் கட்ட உரிய அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும். திருச்சி – பெங்களூருக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினமும் ரயில் இயக்கப்பட வேண்டும். 

திருச்சியில் இருந்து காலை சென்னைக்கும், சென்னையில் இருந்து மாலை திருச்சிக்கும் பகல்நேர இன்டர் சிட்டி இணைப்பு ரயில் தினமும் இயக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டை வழியாக புதுக்கோட்டைக்கு புதிய ரெயில்வே வழித்தடம் ஏற்படுத்திட வேண்டும். திருச்சி அருகில் திருவரம்பூரில் சர்வீஸ் ரோடு ஏற்படுத்தித்தர வேண்டும். திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை நகரில் கேந்திர வித்யாலயா பள்ளி புதிதாக தொடங்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதேபோல், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேவை நேரில் சந்தித்த எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி  பெல்  நிறுவனத்தை முழுமையாக இயக்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.