அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பெண்கள் கால்பந்து போட்டி அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.
கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய நான்கு மண்டலங்களிலிருந்தும் தலா நான்கு அணிகள் வீதம் மொத்தமாக 16 அணிகள் பங்கு பெறுகிறது. இன்று காலை போட்டியினை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வியில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் திருமலைசாமி போட்டிகளைத் துவக்கி வைத்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் ஞானதேவன், பல்கலைக்கழகம் உடற்கல்வித் துறை இயக்குநர் இராஜசேகரன், உடற்கல்வி துறையின் தலைவர் செந்தில்வேலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற போட்டிகளில் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணி அதிகபட்சமாக 16-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியினை வீழ்த்தினர். இந்த போட்டிகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றனர். இந்த போட்டிகள் டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று உடற்கல்வி துறையின் இயக்குநர் இராஜசேகரன் தெரிவித்துள்ளார்.