
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கள்ளக்குறிச்சியில் டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், அவ்வமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.வீ. ஸ்டாலின்மணி தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், டெல்லியில் ஏழு மாதங்களாக போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும். மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் தொழிலாளர் விரோத சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 7,500 நேரடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் வீ. ரகுராமன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எம். ஜோதிராமன், வட்டச்செயலாளர் ஜி. அருள்தாஸ், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் எஸ். அப்பாவு, ஆர். கஜேந்திரன், ஆர். சின்னசாமி, CPIML சார்பில் ஆர். கலியமூர்த்தி ராதாகிருஷ்ணன், மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஏ. ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.