




Published on 20/05/2023 | Edited on 20/05/2023
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று (20.05.2023) அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கொடுத்த அரசாணை 354-ஐ மறு சீராய்வு செய்ய வேண்டும். முதுகலை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தனி அரசாணை வெளியிட வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.