குடிமகன்களுக்கு வீட்டில் 12 லிட்டர் வரை மதுபானங்களை வைத்துகொள்ள அனுமதி
டாஸ்மாக் குடிமகன்களுக்கு வீட்டில் 12 லிட்டர் வரை மதுபானங்களை வைத்துகொள்ள 09-08-17 அன்று அனுமதி தந்துள்ள தமிழக அரசுக்கு பால் ஊற்றி இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
நேற்று 12 மணி அளவில் எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக, தமிழக மதுகுடிப்போரின் வீடுகளில் டாஸ்மாக் மதுபானம் தலா 4.5 லிட்டர், பீர் 7.8 லிட்டர், ஒயின் 9 லிட்டர் என இருப்பு வைத்துகொள்ள பாட்டில் கணக்கில் பீர் 12, ஒயின் 12, மற்றவை 6.7 என அனுமதி தந்து டாஸ்மாக் குடிகாரர்களின் குடும்பத்திற்கும், குடிகாரர்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்து கொள்கிறது.
ஊத்தி கொடுப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், உயிரை பணயம் வைத்து குடிப்பவர்களுக்கு தன் தேவைக்காக 1 லிட்டரிலிருந்து 12 லிட்டர் வரை உயர்த்திதந்துள்ள தமிழக அரசுக்கு நன்றி.
படங்கள்: அசோக்குமார்