Skip to main content

அதிமுக ஏழை கட்சி... திமுக பணக்கார கட்சி... அமைச்சர் ஜெயக்குமார்!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருக்கின்ற சூழலில் இன்று அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது.

மாவட்ட தலைமை அதிமுக அலுவலகங்களில் இன்று விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்பமனுக்களை பெற்று பூர்த்தி செய்து நாளை மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு 25,000 ரூபாயும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,000 ரூபாய் விருப்ப மனு கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 AIADMK poorer party.. DMK rich party... minister jayakumar

 

அதேபோல் நேற்றே திமுக உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு விநியோகத்தை தொடங்கியது. திமுகவின் விருப்பமனுவில் மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர்  50 ஆயிரம் ரூபாய் விருப்ப மனு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக விருப்ப மனுவில் மேயர் பதவிக்கு 25 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஏழைகளின் கட்சி எனவேதான் மேயர் பதவிக்கு நாங்கள் 25 ஆயிரம் ரூபாய் விருப்பமனு கட்டணம் நிர்ணயித்துள்ளோம். ஆனால் திமுக கோடீஸ்வரர்களின் கட்சி எனவேதான் 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளனர் என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்