ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி செலுத்திக் கொண்டதுடன் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மூலம் அது உறுதிசெய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு வந்திருக்கக்கூடிய இந்தத் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இங்கு அனைவருக்கும் தடுப்பூசி என்பது கட்டாயம் தேவை. எனவே, இதில் பாதுகாப்பு என்பது நூறு சதவீதம் உள்ளது. தொடர்ந்து கரோனா தடுப்பு பணிகளையும், தடுப்பூசி போடும் பணிகளையும் மருத்துவர்களும், செவிலியர்களும் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.