காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க எம்.பி.க்கள் போராடுவது ஏமாற்று வேலை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவர விடக்கூடாது என்பதற்காக தான் அ.தி.மு.க எம்.பிக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு கேட்க வேண்டிய விளக்கத்தை கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்டுள்ளது.
சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விளக்கம் கேட்காமல் இருக்கிறது. ரைய்டு, கைது பயத்தால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கிறார்கள்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சி.சி.டி.வி கேமராவை நாங்கள் அணைத்து வைக்க சொல்லவில்லை ஏன் அணைத்து வைத்திருந்தார்கள் என அப்பல்லோ நிர்வாகத்தினரிடம் தான் கேட்க வேண்டும். ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தை தற்போதுள்ள அமைச்சர்கள் பொதுச்செயலாளராக ஏற்று கொண்டு தேர்தல் பணியாற்றியது ஏன்?
பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் இதுபோல விபரிதங்கள் நடக்கும். இவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை விரைவில் வீட்டுக்கு செல்வார்கள் என அவர் கூறினார்.
Published on 23/03/2018 | Edited on 23/03/2018