நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் 59 வார்டுகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 173 வார்டுகளில் அ.தி.மு.க. இரண்டாவது இடம் பிடித்தது. ஆனால் 59 வார்டுகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்திருக்கிறது. மேலும் 111 வார்டுகளில் 20%-க்கும் குறைவான வாக்குகளே பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், 10- க்கும் மேற்பட்ட வார்டுகளில் வாக்கு ஒற்றை இலக்கத்தில் உள்ளது கட்சிக்கு பின்னடைவாக உள்ளது.
அ.தி.மு.க. டெபாசிட் இழந்த பல இடங்களில் பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வின் வேட்பாளர்கள், அக்கட்சியின் வேட்பாளர்களை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டன. உதாரணமாக, மாத்தூரில் அமைந்துள்ள 9- வது வார்டில் அ.தி.மு.க. 9.5% வாக்குகளையே பெற்றுள்ளது. அங்கு பா.ஜ.க. 19% வாக்குகளைப் பெற்றிருந்தது. இதுவரை, அ.தி.மு.க. சந்தித்ததிலேயே இதுவே மோசமான தோல்வி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றார்கள்.