அதிமுக அரசு கவிழும் நாட்கள் எண்ணப்படுகின்றன: ஐ.பெரியசாமி
தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் அதிமுக அரசையும். மத்திய பாரதீய ஜனதா கட்சி ஆட்சியையும் கண்டித்து திண்டுக்கல் மாநகரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாநில துணைபொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஐ.பெரியசாமி, தமிழகத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு எடுக்கிறது. தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் பற்றி அக்கறைபடாத அரசாக தமிழகம் மற்றும் பாரதீய ஜனதா அரசுகள் செயல்படுகின்றன.
கணக்கு பிள்ளை வேலை பார்த்தவருதான் இன்றைய முதல்வராக உள்ளார். அவருக்கு விவசாயிகளை பற்றி கவலை இல்லை. இப்படி விவசாயிகளை வஞ்சித்து வரும் அதிமுக அரசு கவிழும் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
தஞ்சையில் ஏழு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விளையவில்லை என்றால் தமிழகம் பட்டினி பஞ்சத்தை எதிர்கொள்ளும். டெல்டா மாவட்டங்கள் வறச்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது. மாநில உரிமைகளை பாதுகாக்க இந்த அதிமுக அரசு தவறிவிட்டது. அப்படிபட்ட அதிமுக அரசை அகற்ற அனைவரும் களம் இறங்கி போராட வேண்டும் என்றார்.
சக்தி