வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் அதிமுக 4 தொகுதிகளிலும், 1 தொகுதியில் புரட்சி பாரதமும் போட்டியிடுகின்றன.
அதிமுக காட்பாடி – ராமு. முன்னாள் மாவட்டச் செயலாளரான இவர், தற்போது மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவராக உள்ளார். காட்பாடி தொகுதி என்பது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவரும் தொகுதி. இங்கு அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் என்பதால், இவர் தற்போது முக்கியத்துவம் பெற்றவராக உள்ளார்.
வேலூர் – அப்பு எ ராதாகிருஷ்ணன். மாநகர மாவட்டச் செயலாளராக உள்ளார். ஏற்கனவே இரண்டுமுறை காட்பாடியில் நின்று தோல்வியைச் சந்தித்தவர். தற்போது வேலூர் தொகுதியில் நிற்கிறார்.
அணைக்கட்டு – வேலழகன். வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளராக உள்ளார். வேலூர் ஒன்றிய பால் கூட்டுறவு சங்கத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக உள்ளார்.
குடியாத்தம் (தனி) – பரிதா. பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியத்தின் துணைச் செயலாளராக உள்ளார். முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் நிற்கிறார்.
புரட்சி பாரதம் வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் தொகுதியை புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. இன்னும் இங்கு வேட்பாளர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.