சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் ஒரு இடத்தை நீக்கி அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு நீக்கப்பட்டது. இதற்கு எதிராக வீரபாண்டியகட்டபொம்மனின் வாரிசுதாரரான மாணவர் அருண் சங்கர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (28/11/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், '2017- ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தற்போது அமல்படுத்துவது ஏன்? கலந்தாய்வுப் பணியைத் தொடங்கிவிட்டால் எந்த அரசாணையும் பிறப்பிக்கக்கூடாது என்பது அரசுக்கு தெரியாதா?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதல்வர், துணை வேந்தரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.