Published on 26/10/2019 | Edited on 26/10/2019
நேற்று மாலை 5:40 மணியளவில் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையிலிருந்து தற்போது 16 மணிநேரமாக மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. அரக்கோணத்தில் இருந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
மீட்புக்குழுகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேரில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். குழந்தை சுஜித் தற்போது 27 அடியிலிருந்து 70 அடிக்கும் கீழே சென்றுள்ள தகவலும் கிடைத்துள்ளது. 70 அடி ஆழத்தில் இருப்பதால் குழந்தை அழுகின்ற சத்தம் கேட்கவில்லை, இருந்தாலும் குழந்தைக்கு சீராக ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் மாவட்டதில் பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.