பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் தொழில்நுட்பக் குழு அமைத்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
அரசாணையில், 'சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும், புதிதாக அம்சங்களைச் சேர்க்கவும் அரசுக்கு பரிந்துரைக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவின் தலைவராக வேளாண்துறைச் செயலாளர் பொறுப்பு வகிப்பார். மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர், தொழில்துறை இயக்குநர், கால்நடைத்துறை இயக்குநர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேளாண் மண்டல பகுதிகளில் நீர் ஆதாரங்கள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து குழு பரிந்துரை அளிக்கும். மண்டலத்தில் புதிதாக இடங்களை இணைப்பது, வேளாண் தொழில்களைச் சட்டத்தில் சேர்ப்பது குறித்தும் பரிந்துரை தரும். தொழில்நுட்பக் குழு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.