தமிழக காவிரி விவசாயிகள் சங்கம். பொது செயலாளர், பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் பேரழிவு ஏற்படும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய அரசோ விவசாயிகள் கருத்தறியாமல், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமலேயே ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் ஆய்விற்கான கிணறுகள் அமைக்க புதிய அரசாணை அறிவிக்கையை வெளியிட்டது.
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது அதற்கு தடை விதிக்கவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி கடந்தம் 27.01.2020ம் தேதி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்று 10.02.2020 ல் உச்சநீதிமன்றம் 301/20 ல் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுத்தியுள்ளோம். வழக்கு விவசாயிகளுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்.
எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசை எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.