Skip to main content

"அதிமுக அரசின் விளம்பரப்பட்டா, வேதனையில் பொது மக்கள்".

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

அதிமுக அரசின் செல்வாக்கு நிரம்பி வழியும் ஒரு தொகுதி தான் ஆண்டிபட்டி, குறிப்பாக அதிமுக அரசின் முக்கிய தலைவர்கள் (எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ) பலமுறை இத்தொகுதியில் நின்று மகத்தான வெற்றிப்பெற்றுள்ளனர்.இன்று அதிமுக அரசு (அதிமுக,அமமுக) என இரண்டாக பிரிந்துள்ள நிலையிலும் அதிக அளவில் செல்வாக்கு படைத்துள்ள தொகுதியாகவே விளங்குகின்றது. ஆனால் இத்தொகுதியில் 2002 ஆம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப்பட்டா மக்களிடம் இன்றும் சென்றடையவில்லை.
   தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மேக்கிழார்பட்டியில் , அதிமுக அரசின் சார்பாக 15/04/2002 அன்று ஆண்டிபட்டி -சேடபட்டி கூட்டுக்குடிநீர்த்திட்டத் துவக்க விழா, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகக் கட்டிடத்திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.  இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப்பட்டா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கைகளினால் வழங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் இன்றும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இத்திட்டத்தை எதிர்பார்த்து அப்பகுதி மக்கள் பெரும் மனவருத்தத்துடன் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

 

complaint

  

அப்போதைய அதிமுக அரசு ஆதிதிராவிடர்களுக்காக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதன் மூலம் ஒரு பெரிய விளம்பரத்தை மட்டுமே நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பட்டா என்ற பெயரில் முதலமைச்சரின் புகைப்படம் கொண்ட கவர் ஒன்றை மட்டுமே வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் 220 க்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர்.இவர்களுக்கு இது வரையிலும் முறைப்படி இத்திட்டம் சென்றடையவில்லை. 2002-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு பல்வேறு ஆர்பாட்டங்களை நடத்தியும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பயன் இல்லை. கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தான் நிலத்தை அளவிட்டு தந்துள்ளனர். ஆனால் அந்த நிலத்திற்கு சரியான பாதையும் இல்லை. நிலம் கொடுத்த அரசு பாதையில்லை என்று மக்களை பலமுறை ஏமாற்றியுள்ளது. பின்பு மீண்டும் ஆர்பாட்டங்களை நடத்தி பாதை பெறப்பட்டது.ஆனால் அந்த பாதையில் செல்ல முடியாதவாறு 5 அடி உயரத்தில் ஒரு பாறை இருந்தது. அந்த பாறையை உடைக்கவும் அதிகாரிகள் முன் வரவில்லை . அப்பாறையை மக்கள் தங்களின் சொந்த பணத்தை செலவழித்து அகற்றமுற்பட்ட பொழுது அதற்கும் அதிகாரிகள் தடைவிதித்தனர். 
 

theni

பின்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டு அதற்கு அனுமதி பெறப்பட்டது. தற்பொழுது சொந்த செலவில் மக்கள் பாதையை உருவாக்குகின்றனர். இப்படிபட்ட சூழ்திலையில் 11.19 ஏக்கர் நில பரப்பளவு கொண்ட இடத்தை ஒதுக்கியுள்ள அரசு ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனிப்பட்டா மற்றும் நிலத்தை பிரித்தும் கொடுக்கவில்லை. இதைப்பற்றி நாம் விசாரித்த போது மேக்கிழார்பட்டியை சேர்ந்த பயனாளி இசக்கியம்மாள் கணவர் முத்துராஜ் " சார் 2002 ல ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் என்ற பெயரில் மாபெரும் விளம்பரத்தை நடத்திட்டு அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஒன்றும் எடுக்கல இதற்கு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மிகவும் அலட்சியப்படுத்துகின்றனர். ஆனால் இத்திட்டத்தின் மூலம் தெப்பம்பட்டி, ஆவாரம்பட்டி, பாலக்கோம்பை, மேக்கிழார்பட்டி ஆகிய நான்கு கிராம மக்களும் பயனாளிகளாக உள்ளனர். மக்கள் எதிர்பார்த்த அனைத்தும் கனவாக மாறிவிடும் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். ஏனெனில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்திருந்தால் பல்வேறு இலவச வீட்டுகளுக்கான திட்டங்கள் இவ்விடத்தில் அரங்கேறியிருக்கும் இதை விரைவில் செயல்படுத்தி எங்களுக்கான உரிமத்தை அரசு வழங்க வேண்டும்" என்கிறார் முத்துராஜ். 



பா.விக்னேஷ் பெருமாள்

சார்ந்த செய்திகள்