Skip to main content

அரசு கல்வியியல் கல்லூரிகளில் சேர்க்கை அறிவிப்பு

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Admission Notification in Government Colleges of Education
கோப்புப்படம்

 

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (M.Ed) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 25 ஆம் தேதி (25.09.2023) இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு துவங்கும். மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் செப்டம்பர் 30 (30.09.2023) ஆகும். விண்ணப்பம் பதிவு செய்ய ஒவ்வொரு கல்லூரிக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 60 செலுத்தப்பட வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பு விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தேர்வு செய்தல் வேண்டும்.

 

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்  இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் The Director, Directorate of Collegiate Education, Chennai - 15 என்ற பெயரில் 25.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். மேலும் 9363462070, 9363462007, 9363462042, 9363462024 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்