
போக்குவரத்து ஊழியர்கள் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக மத்தியஸ்தர் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்தித் தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்தது.
இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் தொழிற் சங்கங்களுடன் பேச்சு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிஐடியு மற்றும் தொமுச சார்பில் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக மற்றும் மத்தியஸ்தர் பேச்சு நடத்துவார் என்ற உத்தரவை மாற்றி அனைத்துக் கோரிக்கைகள் தொடர்பாகவும் மத்தியஸ்தர் பேச வேண்டும் என்று அதில் கோரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி கோவிந்தராஜ் அமர்வு கூடுதல், போக்குவரத்து கழகங்களின் கூடுதல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் ஊதிய உயர்வு தொடர்பாக மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.