Skip to main content

தன்மேல் வழக்கு திரும்பிவிடுமோ என்ற அச்சத்தால் வழக்கை வாபஸ் பெற்ற நடிகை ராதா!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

Actress Radha Srinivas withdrawn her complaint

 

‘சுந்தரா டிராவல்ஸ்’ படம் மூலமாக அறிமுகமாகி, சில படங்கள் நடித்து வந்தவர் நடிகை ராதா. தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால் அடுத்தடுத்து அவரைப் படங்களில் பார்க்க முடியவில்லை என்றாலும், காதல் விவகாரம், மிரட்டல் என தொடர்ந்து அவரது பெயர் ஊடகங்களில் அடிபட்டு வந்த வண்ணமே உள்ளது. அந்தவகையில் தொழில் அதிபர் பைசூல், அதிமுக பிரமுகரான முனிவேல் ஆகியோரை தொடர்ந்து, அடுத்தபடியாக உதவி ஆய்வாளர் சிக்கியுள்ளார்.

 

நடிகை ராதா, திருமணமாகி கணவரைப் பிரிந்து மகனுடன் சாலிகிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆர்.ஏ.புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளர் வசந்த்ராஜ்  என்பவருடன்  நட்பு ஏற்பட்டு, அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் மற்றும் நடிகை ராதா இருவரும், யாருக்கும் தெரியாமல் தனியாக வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதற்குப் பிறகு இருவரும் ராதா வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். உதவி ஆய்வாளர் வசந்தராஜ் இரவு பணிக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, நடிகை ராதாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

 

இந்த சம்பவம் உதவி ஆய்வாளரின் மனைவிக்குத் தெரியவரவே, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், பேச்சுவார்த்தை மூலமாக சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். அதன் பிறகு வடபழனிக்கு மாறிய வசந்தராஜுக்கு மீண்டும் நடிகை ராதாவுடன் நட்பு தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ராதவுக்காக கார், வீடு என சகல வசதியும் செய்து தந்துள்ளார். இந்நிலையில், வசந்துக்கு தெரியாமலே அவரது ஆதார் கார்டில் தன்னுடைய கணவர் என பெயரை மாற்றியுள்ளார் ராதா.

 

இதனை அறிந்த வசந்த், நடிகை ராதாவிடம் கேட்கவே, இருவருக்கும் பிரச்சினை முற்றியுள்ளது. அதற்கு அவர், “எனக்கு நீங்கள் தாலி கட்டிய கணவர்தானே, அதனால்தான் நான் அனைத்து ஆவணங்களிலும் எனது கணவர் நீங்கள்தான் என்று மாற்றினேன்” என்று கூறியுள்ளார். “படவாய்ப்பு தருவதாக பல பேர் தினமும் வீட்டிற்கு வந்துபோகிறார்களே, அவர்களின் பெயர்களைப் போட வேண்டியதுதானே” என்று இவர் கேட்கவே, இருவருக்கும் பிரச்சினை முற்றியுள்ளது. எப்படியாவது நடிகை ராதாவிடமிருந்து பிரிந்துவிட வேண்டும் என முயற்சிக்கவே, வடபழனியில் இருந்து எண்ணூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் மாறியுள்ளார்.

 

இந்த நிலையில்தான், விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் என்னுடைய இரண்டாவது கணவர் தினமும் சந்தேகப்பட்டு அடிப்பதாக புகார் கொடுத்தார் ராதா. இந்தப் புகாரை வடபழனி உதவி கமிஷனரிடம் கொண்டு செல்லவே, இருவரையும் நேரில் ஆஜராக சொல்லியிருந்தார். உதவி ஆய்வாளர் ஆஜராகிய நிலையில், நடிகை ராதா ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்த நாளே நடிகை ராதா, “என்னை சந்தகேப்பட்டு அடித்தது தவறு என்று வசந்த் மன்னிப்பு கேட்டதால் அந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்” என்று தெறிவித்துள்ளார்.

 

ஆனால் நடந்தது அதுவல்ல. “ஏற்கனவே தொழிலதிபர், அதிமுக பிரமுகர் என தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று நீங்கள் கொடுத்த வழக்கு உள்ளது. உங்களைத் தொடர்ந்து இப்படி ஏமாற்றுகிறார்கள் என்றால், எதற்காக மீண்டும் இதுபோன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள்” என்று கேள்வியை உதவி கமிஷனர் முன்வைத்துள்ளார். “அப்படியென்றால் அவர்கள் உங்களை ஏமாற்றவில்லை. நீங்கள்தான் அவர்களை ஏமாற்றுவதாக தெரிகிறது. அவர்கள் உங்கள் மேல் வழக்கு தொடுத்தால் நீங்கள்தான் சிக்கிக்கொள்வீர்கள்” என்று எச்சரித்த நிலையிலே வாபஸ் பெறப்பட்டதாக தெரிகிறது. 

 

இது தொடர்பாக பேசிய நடிகை ராதா, “இந்த வழக்கின் மூலமாக அவருக்குப் பதவி உயர்வில் சிக்கல் ஏற்படும் என்ற காரணத்தாலேயே என்னுடைய வழக்கை வாபஸ் பெற்றேனே தவிர, போலீஸ் அழுத்தத்தால் இல்லை. அவர் எனக்கு எந்தக் காரும் வாங்கித் தரவில்லை. அவருக்குத்தான் நான் கார் வாங்கித் தந்துள்ளேன். என்னுடைய வங்கிக் கணக்கிலும் அவருடைய பெயரைத்தான் கணவராக சேர்த்துள்ளேனே தவிர, அவருடைய பணத்திற்காக இல்லை” என்றார். 

 

இதுகுறித்து பேசிய உதவி ஆய்வாளர் வசந்தராஜ், “சொல்லுவது எல்லாமே தவறாகவே உள்ளது. போலீஸ் விசாரனை செய்த நிலையிலும் நான் பேசினால் அது சரியாக இருக்காது. ஏற்கனவே என்னுடைய குடும்பம் நொந்துபோய் உள்ள நிலையில், இதைப் பற்றி பேசினால், அது தவறாக இருக்கும். இதைப் பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்