பாரதப்பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு என்பதை நனவாக்க கடன் வழங்க கோவையில் தடம் பதிக்கிறது ஆதார் ஹவுஸிங் பைனான்ஸ்
.
ஆதார் ஹவுஸிங் பைனான்ஸ் வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவில் கால் பதிக்க வருகிறது. இதன் தொடக்கமாக வருமானம் குறைவான அனைவருக்கும் ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் வழங்க ஆதார் பைனான்ஸ் நிறுவனம் தென்னிந்தியா முழுவதும் தனது கிளையை தொடங்கி வருகிறது. பாரதபிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கடன் வழங்கி வருவதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற்று வாழ்க்கையில் நம்பிக்கையுடன் வாழ காய்கறி விற்பனையாளர் முதல் அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்த இருப்பதாக ஆதார் ஹவுஸிங் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தியோசங்கர் திரிபாதி அவர்கள் தெரிவித்தார். மேலும் ஆதார் ஹவுஸிங் பைனான்ஸ் இந்தியா முழுவதும் 275 கிளைகளிலிருந்து கூடுதலாக 1500 கிளைகளை உருவாக்கி புதிய பயனாளர்களை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.