Skip to main content

ஹனிமூனில் மறுப்பு தெரிவித்த மனைவி; பொய் புகாரால் சிக்கிய கணவர் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:90

Published on 05/10/2024 | Edited on 05/10/2024
 advocate-santhakumaris-valakku-en-90

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்

காவியப்பிரியா என்ற பெண்ணின் வழக்கு இது. இந்த பெண்ணுக்கு அவரின் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக என்னிடம் தனது தந்தையுடன் வந்தார். ஆனால் தன் கணவருடன் காவியப்பிரியா சேர்ந்து வாழ ஆசைப்பட்டாள். அவளிடம் அந்த விவாகரத்து நோட்டீஸ் வாங்கி படிக்கும்போது, காவியப்பிரியாவைப் பற்றி நிறைய தவறான விஷயங்கள் இருந்தது. கணவனுக்கும், மனைவிக்கும் இடையேயான அந்தரங்க உறவை தனது பெற்றோரிடம் காவியப்பிரியா சொல்லிவிடுவாள் என்றும் அவரது கணவர் ஒருமுறை தேன் நிலவிற்காக அழைத்து செல்லும்போது அங்கிருந்து ஓடி பெற்றோர் வீட்டிற்கு சென்றதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு அந்த நோட்டீஸில் இருந்தது. இதையெல்லாம் படித்து பார்த்தால் காவியப்பிரியாவிடம் அவரது கணவர் மிகவும் கஷ்டப்படுவதுபோல் அந்த நோட்டீஸில் எழுதி இருந்தது.

அதன் பிறகு காவியப்பிரியாவிடம் விஷயம் என்னவென்று கேட்டும்போது, பையன் என்ஜினியரிங் படித்ததால் காவியப்பிரியா வீட்டில் நிச்சயத்தின் போது  ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பையனுடைய அம்மாவின் வற்புறுத்தலால் 100 பவுன் நகை போட்டு தனக்கு கல்யாணம் செய்து வைத்தனர். அதன் பின்பு காவியப்பிரியாவின் மாமியா, பெண் வீட்டார் பக்கம் நல்ல செலவு செய்வதால், சீராக வீட்டில் வைக்கும் பொருட்கள் அனைத்தையும் கேட்டுள்ளார். காவியப்பிரியாவுக்கு பையனை பிடித்திருந்ததால் எல்லாவற்றையும் மாப்பிள்ளைக்கு செய்துகொடுத்து திருமணத்தை முடித்து வைத்துள்ளனர். இதையடுத்து காவியப்பிரியாவின் மாமியா, கல்யாணம் ஆகி 6,7 மாசமாகிவிட்டது இன்னும் ஏன் குழந்தையில்லாமல் இருக்க? என்று அவளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவள் நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்றாள். அதற்கு மாமியார், என் பையன் மேல பிரச்சனை இருக்கு சொல்றியா? என்று திட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையில் காவியப்பிரியா கணவர் கல்யாணத்திற்கு முன்பு இருந்தே குடிப்பழக்கத்தில் இருந்துள்ளார். இதை மாமியாவிடம் அவள் சொல்லும்போது எல்லோரும் தான் குடிக்கின்றனர் என்று மழுப்பியுள்ளனர். அதன் பின்பு ஒருநாள் காவியப்பிரியாவின் மாமியா, குழந்தையில்லை என்று சொல்லி மீண்டும் அவளை திட்டியுள்ளார். இதையடுத்து நடந்ததை தன் தந்தையிடம் காவியப்பிரியா சொல்ல அவரும் டாக்டரிடம் அழைத்து சென்று பார்க்கும்போது உடம்பில் எந்தவித பிரச்சனையின்றி காவியப்பிரியா நன்றாக இருந்துள்ளார். இதை தனது சம்பந்தியிடம் காவியப்பிரியா தந்தை சொல்லும்போது, மாப்பிள்ளை அதற்கு காவியப்பிரியா தன்னிடம் தாம்பத்திய உறவில் இல்லை என்று கூறியிருக்கிறான். இதை முன்பே சொல்லியிருந்தால் நான் காவியப்பிரியாவுக்கு டெஸ்ட் பண்ணியிருக்க மாட்டேன் என்று அவளின் அப்பா சொல்லியிருக்கிறார். 

பின்பு இரண்டு குடும்பத்தினருக்கும் குழந்தை வேண்டும் என்று பொறுமையாக மாப்பிள்ளையை அழைத்து மருத்துவமனையில் பரிசோதித்து பார்க்கும்போது, மாப்பிள்ளைக்கு விந்தணு செல்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், உறவுகொள்வதில் சிக்கல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவியப்பிரியாவின் கணவருக்கு அவரது அப்பா, நெல்லிக்காய் லேகியம் கொடுத்துள்ளார். ஆனால் காவியப்பிரியாவின் மாமியா, அவளுக்கு புள்ளப்பூச்சிய சாப்பிடு, வேப்பிலையை அரைத்து குடி என்று தொடர்ந்து அவளையே தொந்தரவு செய்துள்ளார். இதையெல்லாம் காவியா தன் தந்தையிடம் கூறியுள்ளார் இரண்டு மூன்று மாதத்தில் சரி ஆகிவிடும் இதுபோன்ற என் பிள்ளைக்கு எதையும் கொடுக்காதீர்கள் என்று சம்பந்தியிடன் கூறியுள்ளார். காவியாவின் கணவர் மருத்துவமனைக்கு செல்லாமல் தன் மனைவி தன்னை ஆண்மைக்குறைவுள்ளவன் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதையெல்லாம் செய்வதாக கூறி, காவியபிரியாவை வீட்டிற்கு அனுப்பி விவாகரத்து வழக்கு போட்டுள்ளார். 

நடந்த முழுவிவரத்தையும் காவிய பிரியா சொன்ன பிறகு அவரது அப்பா என்னிடம், மாப்பிள்ளையுடன் சேர்ந்து காவியப்பிரியா வாழ வேண்டும் அவருக்கு இருக்கும் உடல் ரீதியான பிரச்சனையை சரி செய்துவிடலாம் என்று கூறினார். இதற்கிடையில் காவியப்பிரியாவை அவளது மாமியா தொடர்ந்து குழந்தையில்லை என சொல்லும்போது அதற்கு அவள் உன் பையன் குடித்துவிட்டு தலைகீழாகப் படுத்துள்ளார் அவரை எழுப்புங்கள் என்று முகத்தை பார்த்து சொல்லியிருக்கிறது. அப்படி இருந்தும் தன் கணவர் திருந்தி வர வேண்டும் என்று உறுதியாக காவியப்பிரியா இருந்துள்ளார்.

இருவருக்கும் இடையே வழக்கு தொடரும்போது காவியப்பிரியா கணவருக்கு ஸ்பெஷல் கவுன்சிலிங் கேட்டு மனு அளித்தோம். வழக்கு நடைபெற்று வந்த சமயத்தில் டாக்டர் வந்து காவியப்பிரியா கணவரை பரிசோதித்து பார்க்கையில் ஏற்கனவே வந்த அதே ரிசல்ட் வந்துள்ளது. அதன் பிறகு நீதிபதி காவியப்பிரியா கணவரை அழைத்து உன்னைப்போல் இங்குள்ள 30% ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. அதனால் குடிப்பழக்கத்தை விட முயற்சி செய் என்று அவனிடம் கூறினர். பின்பு இவனும் போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று குடிப்பழக்கத்தை விட முயற்சி எடுத்துள்ளான். தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு கவுன்சிலிங் வரும்போது அந்த பையன் கொஞ்சம் தெளிவாக இருந்தான். இதையடுத்து அந்த பையனுக்கே தான் செய்வது தவறு என்று உணர்ந்துள்ளான். இதனிடையே காவியப்பிரியாவின் தந்தை சம்பந்தி வீட்டிற்கு சென்று தன் பெண்ணுக்கு போட்டு அனுப்பிய 100 பவுன் நகையில் பாதிகூட இல்லை என்று சத்தம் போட்டுள்ளார். அதை விசாரிக்கையில் காவியப்பிரியா கணவர் அந்த நகைகளை அடகு வைத்தது தெரிய வந்திருக்கிறது. பின்பு காவியப்பிரியா தந்தை சம்பந்தியிடம் போலீசாரிடம் புகார் தெரிவித்தால் உன் புள்ளைக்கு வேலை போய்விடும் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து தன் மருமகனிடம் சென்ற காவியப்பிரியா தந்தை, மருகனுக்கு இரண்டு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

ஒன்று காவியப்பிரியாவுடன் சந்தோஷமான வாழவேண்டும் என்றும், மற்றொன்று நகை கேட்டு போலீசில் புகார் கொடுக்கவா என்று கேட்டுள்ளார். அதன் பிறகு இரு வீட்டாரும் பேசி பையனையும் பெண்ணையும்  தனிக்குடித்தனம் அனுப்பியுள்ளனர்.பின்பு அவருக்கு குழந்தை பிறந்து இருவரும் சந்தோஷமாக வாழத்தொடங்கினர். இப்படித்தான் காவியப்பிரியா வழக்கு முடிந்தது.