இனி நடிகர்கள் நாடாள முடியாது: ஜெ.குரு பேச்சு
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் விழுப்புரத்தில் நடக்கும் சமூக நீதி மாநாடு குறித்த விளக்க பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் செவிலி மேட்டில் நடந்தது.
கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடு வெட்டி ஜெ.குரு கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இனி நடிகர்கள் நாடாள முடியாது. தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டு இருப்பவர்கள் ஊழலில் சிக்கிக்கொண்டு தங்களை காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தின் ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பவர் மோடி தான். இவ்வாறு பேசினார்.