Published on 19/09/2018 | Edited on 19/09/2018
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் முழு மருத்துவ செலவை நடிகர் சூர்யா ஏற்றார்.
![surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/vximeZWNnUDI2K9Cz2Mj--SlA67qIB98gqpvxdoJn8s/1537375548/sites/default/files/inline-images/sur2.jpg)
![surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/8ZMMVLSeRv5Esz68O0Wv_Fr5y6yZCM43rUfNMDxgfDk/1537375574/sites/default/files/inline-images/sur3.jpg)
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தினேஷ் என்ற 16 வயது சிறுவன் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம்மிகுந்தவனாக காணப்பட்டான். அந்த சிறுவன் குறித்த பேட்டி ஒன்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த சிறுவன் பற்றி கேள்விபட்ட நடிகர் சூர்யா அந்த சிறுவனை நேரில் சந்தித்து அந்த சிறுவனின் மருத்துவ செலவுகளை ஏற்றார். அதேபோல் சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமாரும் அந்த சிறுவனுக்கு ஆறுதல் சொல்லி தான் வரைந்த ஓவியத்தை பரிசாக கொடுத்தார். மேலும் அனைவரும் குடும்பத்துடன் சிறுவன் தினேசுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.