Skip to main content

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு  ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? வாக்குச்சாவடியில் பெண் தர்ணா

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எருக்கலகோட்டை வாக்குச்சாவடியில் தேன்மொழி என்ற வாக்காளர் வாக்களிக்க சென்றார்.  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி அதிகாரிகள் தேன்மொழியை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.  

 

t

 

அதிகாரிகளிடம் எவ்வளவோ சொல்லி வாக்குவாதம் செய்து பார்த்தும் வாக்களிக்க அனுமதி மறுத்துவிட்டதால்,  நடிகர் சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்.  நடிகருக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா என்று அதிகாரிகளிடம் கூறிவிட்டு வாக்குச்சாவடியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

t

 

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை சென்னை  வளசரவாக்கத்தில் உள்ள  பள்ளியில் வாக்களிக்க வந்திருந்தார்.  அந்த வாக்குச் சாவடியில் அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருந்தது. இதனால் வாக்களிக்காமல் சென்று விட்டார்.   

 

பின்னர் சிவகார்த்தியனும் அவரது  மனைவி ஆர்த்தியும் மீண்டும்  வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அலுவலர், தங்களது மேலதிகாரிக்கு இந்த தகவல் தந்ததும், டி.ஆர்.ஓ. அந்தஸ்திலுள்ள அந்த மேலதிகாரி, பூத் அலுவலர்கள் மூலமாக பூத்திலிருந்த அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி,  சிவகார்த்திகேயன் சேலஞ்ச் ஓட்டு போட அனுமதி பெற்றிருக்கிறார்.  இதனை தொடர்ந்து, வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார் சிவகார்த்திக்கேயன். 

 

s

 

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத பூத்தில் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தது குற்றம்" என சர்ச்சையை கிளப்பினர்.  இந்த சர்ச்சை  செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்,  சிவகார்த்திகேயனுக்கு அனுமதி அளித்தது போல் தனக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அறந்தாங்கியில் தேன்மொழி என்ற பெண் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்