தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு கமலிடம் நன்றி தெரிவித்தனர்.
அவர்களிடம் கமல், "எப்போதும் எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக தான் இருப்பேன். போராட்டம் உறுதியாகவும் வலிமையாவும் நடந்திட வேண்டும், அதே நேரம் எந்த வகையிலும் அதில் வன்முறை புகுந்து விடக்கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்" என தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இறையடியார் காஜா மொய்தீன் (மாநிலத்தலைவர் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்), மௌலவி சுலைமான் மன்ஃபி (அமைப்பாளர், தமிழ்நாடு அஹ்லே சுன்ன ஜமாத் கூட்டமைப்பு), அ.அக்ரம்கான் (தலைவர்.தமிழ்நாடுஅஹ்லே சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.