Skip to main content

மீனவர்களை விடுக்க நடவடிக்கை தேவை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தல்!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021

 

Action needed to release fishermen: Tamil Nadu Chief Minister urges Union Foreign Minister!

 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 55 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (19/12/2021) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெயசங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (19/12/2021) மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெயசங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்