Skip to main content

அஞ்சல் நிலையங்களில் இனி இலவசமாக ஆதார் அடையாள அட்டை பதியலாம் ! 

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

 

ஆதார் அடையாள அட்டை என்பது தற்போது இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்த அடையாள அட்டை எடுப்பதற்காக முன்பு மாநில அரசு தாசில்தார் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் இருந்தது. காலப்போக்கில் அங்கே பதிவு செய்வதற்கு ஏகப்பட்ட கூட்டம் திரண்டு விடுவதால் டோக்கன் சிஸ்டத்திற்கு மாற்றினார்கள். 

 

ஆ

 

இதன்பிறகு தமிழக அரசு மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு தமிழக அரசு கேபிள் நிறுவனத்துடன் இணைந்த சேவை மையங்களில் இந்த ஆதார் அட்டையாள அட்டை பதிவு செய்வதை கொண்டுவருவதற்காக தனியார் முகவர்களை தேர்வு செய்தனர். அதற்கு முன் பணமாக 10,000 ரூபாய் வசூல் செய்தனர். பிறகு ஒரு வருட இடைவெளிக்கு பிறகு அந்த முன் வைப்பு தொகை எல்லாம் திரும்ப கொடுத்து விட்டனர். 

 

தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார் அதில் அவர்…. 


திருச்சி மாவட்டத்தில் 33 அஞ்சல் நிலையங்களில் கட்டணமின்றி ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யப்படும். ஆனால் ஆதார் அட்டையில் திருத்தம் செலுத்த ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். 

இதே போல் தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் இதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது அது விரிவடைந்து ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் எடுக்கலாம் என்கிற அறிவிப்பை வெளியிட்டுயிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தபால் நிலையங்களில் தனிநபர் அடையாள அட்டை! 

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Personal ID card at post offices!


தபால் நிலையங்களில் தனி நபர் அடையாள அட்டையை 250 ரூபாய் சேவைக் கட்டணத்தில் பெற முடியும் என அறிவித்துள்ளது தபால்துறை. இதுகுறித்து சேலம் மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருணாசலம் கூறியதாவது: 

 

‘கரோனா காலத்திலும் பொதுமக்களுக்கு கடிதங்கள், பார்சல்கள் வழங்குவது மட்டுமின்றி, சேமிப்பு திட்டங்களில் முதன்மையாக தனது அனைத்து சேவைகளையும் அஞ்சல்துறை தங்கு தடையின்றி வழங்கி வருகிறது. சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முடியாதவர்கள், சபரிமலை பிரசாதத்தை 450 ரூபாய் முதல் 4500 ரூபாய் வரை பல்வேறு கட்டணங்களில் தபால் நிலையங்களில் முன்பணம் செலுத்தி தபால் வழியாக பெற்றுக்கொள்ளலாம்.  

 

மற்றொரு சேவையாக அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையைப் பெற, விண்ணப்ப கட்டணமாக 20 ரூபாயும், அடையாள அட்டை கட்டணமாக 250 ரூபாயும் செலுத்த வேண்டும். இதைப் பதிவு தபால் மூலம் பெற கூடுதலாக 22 ரூபாய் செலுத்த வேண்டும்.  

 

இந்த அடையாள அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்யவும், இதனை ஒரு சான்றாக பயன்படுத்தலாம். சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் இந்த அஞ்சலக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். ராசிபுரம் தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் பாஸ்போர்ட் சேவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.’ இவ்வாறு கண்காணிப்பாளர் அருணாசலம் கூறினார்.

 

Next Story

ஆதார் கார்டை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வழி!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

அணைத்து சேவைகளுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயம் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.பின்பு இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிமன்றம் அணைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமில்லை ஒரு சில சேவைகளுக்கு மட்டும் ஆதார் இருந்தால் போதும் என்று கூறியது. இதனையடுத்து ஒருவருடைய ஆதார் எண்ணை மற்றொருவர் முறைகேடாய் பயன்படுத்தி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இத்தவற்றை தடுக்கவே இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும் ஆதார் சம்மந்தப்பட்ட ஆணையம் கூறியுள்ளது. 

 

aadhar card



நமது ஆதார் கார்டு ஆணைய இணைய பக்கத்தின் வாயிலாக அல்லது செல்போன் மெசேஜ் மூலமாகவும் ஆதார் எண்ணை முடக்க முடியும். மீண்டும் அதை திரும்ப பெறவும் முடியும். இந்த வசதியைப் பெற 1947 என்ற எண்ணுக்கு GETOTP என்று டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட வேண்டும். பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு 6 இலக்க ஓடிபி பாஸ்வேர்ட்  வரும். அதை LOCKUID ஸ்பேஸ், ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண் ஸ்பேஸ் 6 இலக்க ஓடிபி  பாஸ்வேர்ட் டைப்செய்து அனுப்ப வேண்டும்.இப்படிச் செய்தால் ஆதார் எண் முடக்கப்படும்.செல்போனுக்கும் இது பற்றிய தகவலும்  வரும். அடுத்து மெசேஜ்  மூலமாக முடக்கத்தை திரும்ப பெற வேண்டுமெனில் ஆதார் விர்ச்சுவல் எண்ணின் கடைசி 6 இலக்க எண்ணைப் பதிவிட்டு அனுப்ப வேண்டும்.


இதற்கு ஒரு ஓடிபி வந்ததும், UNLOCKUID ஸ்பேஸ் ஆதார் விர்ச்சுவல் எண்ணின் கடைசி 6 இலக்கம், ஸ்பேஸ் - 6 இலக்க ஓடிபியை அனுப்பினால் முடக்கம் ரத்தாகி ஆதார் திரும்ப செயல்படத் தொடங்கிவிடும்.மேலும் www.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை முடக்கலாம்.முடக்கியதை திரும்பவும் பெறலாம். இந்த இணையதளத்துக்கு சென்று மை ஆதார் என்பதை இயக்கி உள்ளே சென்றால் ஆதார் சர்வீஸ் என்று ஒரு அட்டவணை இருக்கும். அதில் ஆதார் லாக், மற்றும் அன்லாக் என்பதை கிளிக் செய்து தேவையான விவரங்களை பதிவு செய்தோமானால் ஆதார் தவறாக உபயோகிக்கபடுவதில் இருந்து தவிர்க்கலாம்.