Skip to main content

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

9 Tamil Nadu fishermen issue

 

தமிழக மீனவர்கள் 9 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி கைது செய்து இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 9 பேரையும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 9 பேரையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு  இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

முன்னதாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 8 ஆம் தேதி உரிய அனுமதிச் சீட்டு பெற்று நெடுந்தீவு அருகே இரு படகுகளில் 15 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் கைது செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து கடந்த 21 ஆம்  ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் மீண்டும் இலங்கை கடற்படையால் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்