கரோனா நோய் தொற்று காரணமாக விமான போக்குவரத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் தொழிலாளா்களை அரசு மீட்டுவரும் நிலையில், ஏர் இந்தியா விமானம் தொடர்ந்து தன்னுடைய சேவையை செய்துவருகிறது.
இந்நிலையில், சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்தவா்களை, வான் நுண்ணறிவு பிரிவு அரிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் சோதனை செய்தனா். அப்போது அதில் ஒரு பயணியை சோதனை செய்தபோது, அவருடைய உடைமையில் வைத்து 8.65 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்ததோடு, தொடர் விசாரணையில் ஈடுபட்டனா். அதில், அவர் பெரம்பலுர் மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்த 176 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.