பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது..
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழியை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் ஆட்சியர் அன்பழகன் மதுரைக்கும், பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா திருவாரூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
தர்மபுரி ஆட்சியராக இருந்த கார்த்திகா கன்னியாகுமரி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி ஆட்சியராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த வினய் சேலம் பட்டுப்புழு வளர்ப்பு துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சுகாதாரத்துறை திட்ட இணை செயலாளராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல் குமாரும், சுகாதாரத்துறை இணை செயலாளராக அஜய் யாதவும், கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.