Published on 05/06/2023 | Edited on 05/06/2023
வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்ற நிலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வேட்டையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். குறிப்பாக யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு அவற்றின் தந்தங்கள் கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக விற்கப்படுவது மறைமுகமாக தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் யானை தந்தங்களை விற்க முயன்ற ஏழு பேரை வருவாய் புலனாய்வு துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நான்கு கிலோ யானை தந்தங்களை விற்க முயன்ற ஏழு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கிலோ யானை தந்தங்களின் மதிப்பு 7 கோடியே 19 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.