Skip to main content

30 ஆயிரம் பேருக்கு 6000 கிலோ மட்டன் பிரியாணி; விருந்தளித்து அசத்திய அமைச்சர் நேரு

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

6000 kg of mutton biryani for 30 thousand people; Minister Nehru who hosted the event

 

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் 2024-ல் நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவும் இந்த தேர்தலை கடும் சவால்களுடன் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

 

இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வரும் திமுகவில் அதன் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன் முன்னோட்டமாக இன்று திமுக நிர்வாகிகளுடன்  திருச்சியில் கலந்துரையாடலுக்கு வந்த முதல்வர் 2 நாள் தங்கியிருந்து கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

 

சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

 

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மாநிலம் முழுவதும் தி.மு.க. 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி, இந்த கூட்டம் திருச்சியில் முதன் முறையாக நடந்தது. டெல்டா மண்டலத்திற்குட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மத்திய தஞ்சை தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு ஆகிய 15 மாவட்டங்களின் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்  திருச்சி ராம்ஜி நகர் அருகே நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தை மாநாடு போல் பிரமாண்டமாக நடத்த தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு ஏற்பாடு செய்துள்ளார்.

 

திருச்சி ராம்ஜிநகர் பரமேஸ்வரி மில் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 12,000 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்த 15 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

 

இதற்காக 5000 கிலோ அரிசி 6000 ஆயிரம் கிலோ மட்டன், 4 ஆயிரம் கிலோ சிக்கன் 65 வறுவல், முட்டை மற்றும் முட்டை சாதம் என பிரம்மாண்டமான பந்தலில் அறுசுவை சாப்பாடு பரிமாறப்பட்டது. திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் 30 ஆயிரம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30,000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65,  முட்டை, ஆனியன், தால்சா, தயிர் சாதம் மதிய உணவாக சுவையான உணவை திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான நேரு ஏற்பாடு செய்து விருந்து அளித்து அசத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்