தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்ப்பில் 60% கல்வியாளர்கள், பெற்றோர்கள் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகில இந்திய அளவில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா அல்லது நடத்தப்படுமா என்பது குறித்து தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பிறகு அறிவிக்கும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி ஆணைர் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்ப்பில் 60 சதவிகித கல்வியாளர்கள், பெற்றோர்கள் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் நாளையும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கருத்து கேட்பு முடிந்ததும் நாளை தமிழக முதல்வரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி அதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.