Published on 24/01/2020 | Edited on 24/01/2020
வரி ஏய்ப்பு தொடர்பான புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வேலம்மாள் குழுமத்திற்கு சொந்தமான சென்னை, மதுரை, தேனி, தஞ்சை உட்பட 50- க்கும் மேற்பட்ட இடங்களில் நான்கு நாட்கள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவியில் வேலம்மாள் கல்வி குழுமம் 532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், 2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சோதனை தற்காலிகமாக முடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குழும நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.