Published on 20/02/2019 | Edited on 20/02/2019

மதுரை கோரிப்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட தேவர் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மதுரையிலுள்ள விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கின்றனர்.
முன்னதாக, மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர் சூட்ட கோரிய மனு மீது ஆறு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.