பேட்ட திரைப்படம் வெளியான தியேட்டரில் திருமணம் செய்துகொண்ட தம்பதியை அழைத்து வாழ்த்தினார் ரஜினிகாந்த்.
![rr](http://image.nakkheeran.in/cdn/farfuture/YCifW59so8IHxVSXLA71NNJCbfzFD96u147UTaTPeL0/1550772856/sites/default/files/inline-images/rajini%20parisu%202_0.jpg)
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/K1EVl8RWHo_Moc11ar5qvrrziNkt_88CnVP9X3NDRMM/1550772882/sites/default/files/inline-images/rajini%20parisu%203.jpg)
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/iYktKkpSzxm5UR0tOP1D4cp8TnH0A1kKNxiKEA8m-KY/1550772920/sites/default/files/inline-images/rajini%20parisu%204.jpg)
தாம்பரத்தை அடுத்த படப்பையை சேர்ந்த தீவிர ரஜினி ரசிகர் அன்பரசு, பேட்ட திரைப்படம் ரிலீஸ் அன்று சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் தனது திருமணத்தை நடத்தினார். ‘பேட்ட’ படம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு மணமக்கள் திருமணத்துக்கு தயார் ஆனார்கள். தியேட்டரின் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் மணமக்கள் உட்கார்ந்தனர். புரோகிதர் மந்திரம் ஓத மணமகன் அன்பரசு, மணமகள் காமாட்சி கழுத்தில் தாலி கட்டினார்.
![r](http://image.nakkheeran.in/cdn/farfuture/lCxAr-tz5A5ftB-DHzOAB4vv2QqHEWLGSwDMJP3WGxY/1550772946/sites/default/files/inline-images/rasigan1.jpg)
அப்போது, அங்கு கூடி இருந்த மணமக்களின் உறவினர்கள், ரசிகர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள். மணமக்கள் வாழ்க என்று வாழ்த்து முழக்கமிட்டனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. பேட்ட படம் பார்க்க வந்த ரசிகர்களும் விருந்து உண்டு மகிழ்ந்தனர். உட்லண்ட் தியேட்டரில் பேட்ட படம் பார்க்க வந்தவர்களுக்கு கல்யாண சாப்பாடு வழங்கப்பட்டது. படம் தொடங்கியதும் புதுமண தம்பதியரும் ‘பேட்ட’ படத்தை பார்த்து மகிழ்ந்தனர். அத்தம்பதியினரை அழைத்து அவர்களுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார் ரஜினிகாந்த்.