Published on 13/02/2019 | Edited on 13/02/2019
2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் சட்டசபையில் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இன்று சட்டசபையில் ஓசூர், நாகர்கோவிலை நகராட்சியாக அறிவிக்கக்கூடிய மோசோதா தாக்கல் செய்யப்பட்ட இருக்கிறது. இந்த மோசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்யவுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் மேலும் புதிய 2 மாநகராட்சிகளை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது.
அதேபோல் நெகிழி(பிளாஸ்டிக்) தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கான மசோதாவும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இருக்கிறது.