புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தான் பேசும் ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்க்க முதல்வர் நாராயணசாமியை அழைத்ததின் பேரில் முதல்வரும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்த சுவாரசியமான நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரிலுள்ள கம்பன் கலையரங்கத்தில் கம்பன் விழாவின் 53 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி,துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கம்பன் விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தான் பேசும் ஆங்கில உரையை மொழிபெயர்ப்பு செய்ய முதலில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனை அழைத்தார். அவர் தனக்கு முடிந்தவரை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதாக கூறியபோது ஆளுநர் சற்றும் தாமதிக்காமல் முதலமைச்சர் தன் பேசும் ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டுமென அழைத்ததால் விழாவில் கூடி இருந்தவர்கள் ஆர்வத்துடன் கைத்தட்ட முதலமைச்சரும் முதல்முறையாக ஆளுநரின் உரையை மொழிபெயர்ப்பு செய்தார்.
அப்போது பேசிய ஆளுநர் அடுத்த 10 நிமிடத்திற்கு நான் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புவதாக கூறினார். நானும் அந்நிமிடம் மட்டுமே நம்புகிறேன் என முதல்வர் கூற உடனே துணை நிலை ஆளுநர், ஆனால் நான் இந்த நட்பு காலம் முழுதும் தொடர வேண்டும் என நினைக்கிறேன் என கிரண்பேடி தெரிவித்தார்.
பின்னர் முதல்வரும் உரையை மொழிபெயர்த்தார். அப்போது மீண்டும் துணை நிலையா ஆளுநர் ஆண்டு தோறும் நடைபெறும் கம்பன் விழாவிற்வாக என்னுடைய நிதியிலிருந்தும் முதல்வரின் நிதியிலிருந்தும் நிதி அளிக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார். முதல்வரும் உடனே முதலமைச்சரின் நிதியிலிருந்து 50 ஆயிரத்தையும், ஆளுநரின் நிதியிலிருந்து 50 ஆயிரத்தை தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடக்கக்கூடாது என கிரண்பேடியை இறக்கினார் மோடி. அதன்படி துணை நிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்ற நிலையில் ஆளுநரின் வேண்டுகோளுக்கினங்க முதலமைச்சர் முதல்முறையாக மொழி பெயர்ப்பு செய்த சுவாரசியமான நிகழ்வு கூடியிருந்தவர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. ஆனால் இந்த நிகழ்வு மோடிக்கும், பாஜக மேலிடத்திற்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.