ஆசிரியையிடம் 5 பவுன் நகை கொள்ளை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் அரசக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, சத்தியவாடி கிராமம் அருகில் செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- சுந்தரபாண்டியன்