
ஈரோடு அருகே செம்பு பாத்திரத்தை இரிடியம் என்று ஏமாற்றி விற்பனை செய்ய முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா, இவர் தன்னிடம் பாரம்பரியமிக்க இரிடியம் இருப்பதாகவும், தொன்மையான அந்த இரிடியத்தை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்று கூறி அதனை விற்பனை செய்யும் முகவராக செயல்படும்படி கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த சிட்டிபாபு சிங் என்பவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
பாரதிராஜாவின் பேச்சில் சந்தேகமடைந்த சிட்டிபாபு, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிட்டிபாபுவின் புகாரின் பேரில், பாரதிராஜாவையும், அவரது நண்பர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், செம்பு பாத்திரத்தை இரிடியம் என கூறி ஏமாற்ற முயன்றதும் தெரியவந்தது.